தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சரித்திர சாதனைகள் படைத்து வரும் திமுகவுக்கு வாக்களியுங்கள்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

சரித்திர சாதனைகளை படைத்து வரும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என மடத்துக்குளம் திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

News image

பூலாங்கிணறு கிராமத்தில் பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:07 pm

சரித்திர சாதனைகளை படைத்து வரும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என மடத்துக்குளம் திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணனை ஆதரித்து முக்கோணம், பூலாங்கிணறு, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் ஜெயராமகிருஷ்ணன் பேசியதாவது:

சாமானிய மக்கள் பயன்பெறும் விதத்தில் ஏராளமான நலத் திட்டங்களையும் ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக நிறைவேற்றி தமிழகத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். எனவே திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

மேலும் தற்போதைய தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை, பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், முதியோருக்கு ஒய்வூதியமாக ரூ.2 ஆயிரம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறஇத்து கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த முறை மடத்துக்குளம் தொகுதியில் திமுக வெற்றி வாகை சூட வேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.