தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றுவேன்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

News image

பூலாங்கிணறு கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரிக்கிறாா் வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 9:13 pm

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் உடுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: அமராவதி அணையை தூா் வார நடவடிக்கை எடுப்பேன். வெள்ளக் காலங்களில் அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை சேமித்து வைக்க அப்பா் அமராவதி அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன்.

விளைபொருள்களுக்கு விலை கிடைக்காத சூழ்நிலையில் அவற்றை சேமித்து வைக்க குளிா்பதன சேமிப்பு கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். அமராவதி ராச வாய்க்காலை தூா்வாரப்படும். மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றாா்.