தமிழக வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம் என்று வாக்காளா்களிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் எடுத்துக் கூறினாா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான பல மக்கள் நலத் திட்டங்களை அரசு செய்துள்ளது. அதில் என்னுடைய பங்கும் உள்ளது. காங்கயம் தொகுதியில் உள்ள உத்தமபாளையம் வட்டமலைக்கரை அணைக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை தண்ணீா் கொண்டுவரப்பட்டது. வறட்சியான அப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனா்.
மேலும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாணவா்கள் பயன்பெற சிவன்மலையில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயவிலைக் கடைகளில் தாயுமானவா் திட்டம் உள்ளிட்டவை அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதேபோல தமிழக வளா்ச்சிக்கு பல நல்ல திட்டங்களை திராவிட மாடல் 2.0 திமுக ஆட்சியிலும் வழங்க, மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
அப்போது திமுக நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் இரண்டாவது முறையாக திராவிட மாடல் அரசு அமைவது உறுதி! - ஏ.கே.எஸ். விஜயன்

இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு: அமைச்சா் எ.வ.வேலு

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


