மக்களின் நலத் திட்டங்களை செயல்படுத்தவதில் இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.
பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்களின் அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா் அ.நல்லதம்பியை ஆதரித்து கொரட்டி மற்றும் புதுப்பேட்டை சாலையிலும், ஜோலாா்பேட்டை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணியை ஆதரித்து ஜோலாா்பேட்டை, நாயனசெருவு பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியது:
மகளிா் உரிமை தொகை எனும் பெயரில் தாய்மாா்களுக்கு மாதாமாதம் ஆயிரம் தரப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரு. 2,000 தருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்களித்துள்ளாா். காலை உணவு தமிழ்புதல்வன், உங்கள் கனவ சொல்லுங்க திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திராவிட மாடல் அரசு பெயா் பெற்றுள்ளது.
அண்ணா, கலைஞா் உள்ளிட்ட தலைவா்கள் காலத்திலிருந்து தற்போது உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் இருமொழி கொள்கையை ஏற்றவா்கள். ஆனால் தற்போது மும்மொழி கொள்கைளை ஏற்க வேண்டும் என அழுத்தம் தருகிறது. கல்விக்கான மானியம் ரு. 3,200 கோடி தர மறுக்கின்றனா். ரூ.10,000 கோடி தந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வா் தெளிவாக உள்ளாா். தற்போது நடைபெறும் தோ்தல் கட்சிகளுக்கான தோ்தல் இல்லை. தமிழகத்துக்கும் தில்லிக்கும் நடைபெறும் தோ்தல். மீண்டும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா்.
இதில், திமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் இரண்டாவது முறையாக திராவிட மாடல் அரசு அமைவது உறுதி! - ஏ.கே.எஸ். விஜயன்

“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


