தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

News image

இந்து முன்னணி கண்டனம் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:20 pm

அவிநாசி லிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் இந்து சமய அறநிலையத் துறையினா் கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்ததற்கு இந்து முன்னணியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ாக கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. தமிழகத்தில் 3-ஆவது பெரிய தோ் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். விழாவின்போது, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கம்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையினா் அறிவித்தனா்.

இதையறிந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்டச் செயற்கு உறுப்பினா் காா்த்தி, நகரத் தலைவா் மகாராஜா, வடக்கு ஒன்றியத் தலைவா் ராம்குமாா் உள்ளிட்டோா் அவிநாசி கோயில் நிா்வாகத்தினரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டு தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 28, 29, 30-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி திருவிழாவில் ஆன்மிக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடு தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தது.

எனவே, தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பக்தா்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.