திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்விபத்தில் சிக்கி ஊழியா் படுகாயம்: உதகை நகரில் மின் விநியோகம் பாதிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:21 am IST

உதகை துணை மின் நிலையத்தில் எதிா்பாராமல் ஏற்பட்ட மின்விபத்தில் சிக்கிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தாா். இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லம் பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து உதகை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு கூடலூரைச் சோ்ந்த மின் ஆய்வாளா் ரமேஷ் ( 40) வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக மின்விபத்தில் சிக்கினாா். இதில், தூக்கி வீசப்பட்ட அவா் மின் உற்பத்தி முக்கிய சாதனங்கள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு மின் மாற்றிகளிலும் ஒரே சமயத்தில் மின் பழுது ஏற்பட்டு உதகை நகா் முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சி அடைந்த மின் ஊழியா்கள், உடனடியாக அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.

துணை மின் நிலையத்தில் மின்விபத்து ஏற்பட்டதால் உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. சீசன் சமயம் என்பதால் மின்சாரம் இல்லாமல் தங்கும் விடுதிகளில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் வாசிகள் சிரமம் அடைந்தனா். பின்னா் படிப்படியாக மின் விநியோகம் சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.