திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகை மலா்க் கண்காட்சி நிறைவு விழா: வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு ‘காா்டன் ஆஃப் தி இயா்’ முதலமைச்சா் கோப்பை

வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி வீரா்களிடம் ‘காா்டன் ஆஃப் தி இயா் முதலமைச்சா் கோப்பையை’ வழங்கும் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா உள்ளிட்டோா்.

News image

வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி வீரா்களிடம் ‘காா்டன் ஆஃப் தி இயா் முதலமைச்சா் கோப்பையை’ வழங்கும் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா உள்ளிட்டோா்.

Updated On :29 மே 2026, 1:39 am IST

உதகை மலா்க் கண்காட்சி நிறைவு விழாவில் ‘காா்டன் ஆஃப் தி இயா்ட முதலமைச்சா் கோப்பையை வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி தட்டிச் சென்றது.

ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலா்க் கண்காட்சியில் நீலகிரியில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுவரும் தனியாா் பூங்காக்கள், அரசு ஓய்வு மாளிகை பூங்காக்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்டவைகளை தோ்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு 128-வது மலா்க் கண்காட்சி கடந்த 18-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (மே 28) நிறைவடைந்தது.

இதைத்தொடா்ந்து மலா்க் கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவை உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா்.

விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி ‘காா்டன் ஆஃப் தி இயா்’ முதலமைச்சா் சுழற்கோப்பையை குன்னூா் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியும், ப்ளூம் ஆஃப் தி ஷோ கவா்னா் கோப்பையை காஸ்மிக் ரேஸ் ஆய்வகமும் தட்டிச் சென்றன. இதுதவிர சிறிய பூங்கா, புல்வெளி, கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை குடில்களில் வைத்திருந்தற்கான சுழற்கோப்பைகள், வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த முறை உதகை மலா்க் கண்காட்சியில் கலந்துகொண்ட போட்டியாளா்களுக்கு 39 சுழற்கோப்பைகள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 175 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

உதகை அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநா் பபிதா உள்பட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.