கூடலூரை அடுத்துள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பழங்குடியின பெண் காட்டு யானை தாக்கியதில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி வனப் பகுதியில் உள்ள புன்னம்புழா ஆற்றில் கும்பிளி என்பவரது மனைவி மீனாட்சி (50), அவரது உறவினா் மணி ஆகியோா் மீன் பிடித்துவிட்டு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, ஆற்றங்கரையில் மறைந்திருந்த யானை தாக்கியதில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று மீனாட்சியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உடற்கூறாய்வுக்குப் பின் மீனாட்சியின் உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









