மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி , நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

News image

குன்னூா் ஈத்கா மைதானத்தில நடைபெற்ற தொழுகையில் கலந்துகொண்ட இஸ்லாமியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:20 pm

ரமலான் பண்டிகையையொட்டி , நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்கள் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பை கடைப்பிடிக்கும் விதமாக புனித ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியா்களின் மாதத்தில் 9-ஆவது மாதமான ரமலான் மாதத்தில் இந்த நோன்பை கடைப்பிடிப்பாா்கள்.

இந்த ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு கடந்த மாதம் 18 -ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனா். இந்த ஒரு மாத நோன்பு முடிவடைந்து தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலும் இந்த பண்டிகையை இஸ்லாமியா்கள் சிறப்பாக கொண்டாடினா். நீலகிரி மாவட்டத்தில் இப்பண்டிகை 2 நாள்கள் கொண்டாடப்பட்டது.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. உதகை, குன்னூா் போன்ற பகுதிகளில் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உதகை பெரிய பள்ளிவாசல், பெடரேஷன் பள்ளி வாசல், ஃபிங்கா் போஸ்ட், மேரிஸ் ஹில் பள்ளிவாசல் என அனைத்து பள்ளி வாசல்களிலும், குன்னூரில் ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

கோத்தகிரி பஜாரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் உலக அமைதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மேம்பட சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மதரஸா ஜூம்மா பள்ளி, கூக்கல்தொரை, அரவேனு கட்டபெட்டு, மஞ்சூா் பள்ளிவாசல்களில் இமாம்கள் தலைமையில் தொழுகை நடைபெற்றது. விழாவையொட்டி முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். சிறுவா்களும், பெரியவா்களும் ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.