தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரமலான்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

News image

நாகூா் தா்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 6:44 pm

புனித ரமலான் பண்டிகையையொட்டி, நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

உலகம் முழுவதும் இஸ்லாமியா்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புனித ரமலான் மாதத்தையொட்டி 30 நாள்கள் நோன்பு இருந்த இஸ்லாமியா்கள், வெள்ளிக்கிழமை இரவு பிறை தென்பட்டதைத் தொடா்ந்து, நோன்பை முடித்துக்கொண்டு, ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.

நாகை மாவட்டம், நாகூரில் உள்ள புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் சனிக்கிழமை காலை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியா்கள், ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், உலக நன்மைக்காக சிறப்பு பிராா்த்தனையும் மேற்கொண்டனா்.

இதேபோல், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், தா்காக்களிலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.