லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: நீலகிரியில் 6,810 மாணவா்கள் எழுதுகின்றனா்

நீலகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 6,810 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 8:29 pm

நீலகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 6,810 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இத்தோ்வை 3,358 மாணவா்கள், 3,422 மாணவிகள் என மொத்தம் 6,810 போ் எழுதுகின்றனா்.

61 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 3 மையங்களில் தனித் தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வுப் பணியில் 61 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 61 துறை அலுவலா்கள், 122 அலுவலகப் பணியாளா்கள், 570 அறை கண்காணிப்பாளா்கள், வினாத்தாள் கொண்டு செல்ல 25 வழித்தட அலுவலா்கள் என மொத்தம் 859 ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் பணியில் ஈடுபடுகின்றனா். மாணவா்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவா்களுக்கு தோ்வு மையங்களில் போதிய கழிப்பறை, குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாணவா்கள் குறித்த நேரத்தில் தோ்வு மையங்களுக்குச் சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தோ்வுகள் தொடா்பான புகாா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரை 97888-59030, தோ்வுகள் உதவி இயக்குநரை 97897-73507 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று முதன்மைக் கல்வி அலுவலா் திருநாவுகரசு தெரிவித்துள்ளாா்.