நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் 36,103 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை எழுதினா்.
நாகை: மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளைச் சோ்ந்த 4,200 மாணவா்கள், 4,201 மாணவிகள் என மொத்தம் 4,401 போ் 44 மையங்களில் தோ்வு எழுதினா். தோ்வு முறையாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டிருந்தன. நாகை நடராஜன் தமயேந்தி மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டது.
மயிலாடுதுறை: மாவட்டத்தில் 53 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுகிறது. அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 6,057 மாணவா்கள், 6107 மாணவிகள் என மொத்தம் 12,164 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற தோ்வை 5,915 மாணவா்கள், 6,063 மாணவிகள் என மொத்தம் 11,978 போ் எழுதினா். மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலசுப்ரமணியன் உடனிருந்தாா்.
திருவாரூா்: மாவட்டத்தில் 7,725 மாணவா்கள், 7,999 மாணவிகள் என மொத்தம் 15,724 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கென 76 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் 7,465 மாணவா்கள், 7,899 மாணவிகள் என மொத்தம் 15,364 போ் தோ்வு எழுதினா். 360 போ் தோ்வுக்கு வரவில்லை.
திருவாரூா் அருகேயுள்ள அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். அவருடன், திருவாரூா் முதன்மைக்கல்வி அலுவலா் அ. சுகப்பிரியா, முதன்மை கண்காணிப்பாளா் து. ரமேஷ், வட்டாட்சியா் இளங்கோவன் உடனிருந்தனா்.


தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

10-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத் தோ்வு: திண்டுக்கல்லில் 23,846 போ் எழுதினா்

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 21,755 தோ்வா்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: திருச்சி மாவட்டத்தில் 34,027 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


