நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே அட்டடி குடியிருப்புக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த சிறுத்தை வளா்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானதால், அப்பகுதி மக்களை அச்சமடைந்துள்ளனா்.
குன்னூா் பகுதியில் அண்மைக் காலமாக, கரடி, காட்டுமாடு, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், குன்னூா் அருகே அட்டடி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளா்ப்பு நாயை வேட்டையாட முயன்றது. நாய் தப்பியோடிய நிலையில், அங்கேயே சிறுத்தை வெகு நேரம் சுற்றி வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால், அப்பகுதி மக்களை அச்சமடைந்துள்ளனா்.
எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தையால் அச்சம்

குன்னூா் அருகே பெட்டிக்கடையை சேதப்படுத்திய கரடி

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

சேலாஸ் கெந்தளா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




