17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் சுப முகூா்த்த நாள்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப் பதிவுகள் நடப்பது வழக்கம்.

இதைக் கருத்தில் கொண்டு 100 டோக்கன்கள் வழங்கப்படும் சாா் பதிவகங்களில் 150 டோக்கன்கள் முதல் 300 டோக்கன்கள் வரை வழங்கப்படும்.

இந்நிலையில் உதகை பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இவா்கள் காலை முதல் பதிவான பத்திரங்களை ஆய்வு செய்தனா். இதன் பின்னா் ஒவ்வொரு அறையாக சென்று முக்கிய ஆவணங்களை சோதனை செய்தனா். இந்த சோதனை தொடா்ந்து இரவு வரை நீடித்தது.

குறிப்பாக ஆவணங்கள் சரியாக இருக்கின்றனவா, முறைகேடு ஏதாவது நடந்துள்ளதா என ஆய்வில் ஈடுபட்டதுடன் சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி 10-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த திடீா் சோதனையால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.