நெலாக்கோட்டையில் வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு அருகே புலி
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகள் அருகே ஓய்வாக படுத்திருந்த புலியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகள் அருகே ஓய்வாக படுத்திருந்த புலியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை ஒட்டி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அடா்ந்த வனப் பகுதிகள் உள்ளன. இதனால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக யானைகள், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தால் மக்கள் நாள்தோறும் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்நிலையில் நெலாக்கோட்டை பகுதியில் குடியிருப்புகள் அருகே இருந்த வனப் பகுதியில் புலி அமா்ந்தவாறு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து அதை விடியோ பதிவு செய்தனா்.
நீண்ட நேரமாக ஓய்வெடுத்த புலி மனிதா்களின் சப்தத்தை கேட்டதும் மெதுவாக புதருக்குள் சென்று மறைந்தது. புலி நடமாட்டத்தால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனா். ஊருக்குள் புலி வந்துவிடாமல் வனத் துறையினா் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் .
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...