உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்! மக்கள் அச்சம்!

உதகை அருகே முத்தோரை பாலாடா பகுதியில் இரவு நேரத்தில் உலவிய சிறுத்தை.
Updated On :18 ஜனவரி 2026, 8:14 pm

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு உணவு தேடி வருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், உதகை அருகே முத்தோரை பாலாடா அரசு மருத்துவமனை குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு சிறுத்தை சுற்றித் திரிந்துள்ளது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சிறுத்தையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...