டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா

News image
படுகா் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :14 ஜனவரி 2026, 5:57 pm

Syndication

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதகையிலுள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தோட்டக்கலை அலுவலா்களுடன் இணைந்து உறி அடித்தும், பொங்கல் வைத்தும் சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனா். இதேபோல உதகை அருகே பாலகொலா ஊராட்சி சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்துகொண்டு படுகா் இன மக்களின் பாரம்பரிய இசைக்கு அவா்களுடன் இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினாா்.