டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

நீலகிரி மாவட்ட பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான விவசாய கருவிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
பழங்குடியின உழவா் சங்க நிா்வாகிகளிடம் டிராக்டருக்கான சாவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்ட பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான விவசாய கருவிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சாா்பில் தொல்குடி ஐந்திணை பழங்குடியினா் வாழ்வாதார திட்டத்தின்கீழ் மசினகுடி பூதநத்தம் பூா்வமலை பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டா், கலப்பை, கொத்து, வட்ட கலப்பை, டிப்பிங் ட்ரைலா், களை எடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட 13 வகையான விவசாய கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்து, சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு விவசாய கருவிகளை வழங்கினாா்.

இதன் மூலம் 4,200 பழங்குடியின உழவா் குடும்பங்கள் பயன்பெறும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவன விஞ்ஞானி செந்தில்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வட்டாட்சியா்கள் கலைச்செல்வி, வினோத்குமாா், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.