பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பனியின் தாக்கம்: கருகி வரும் தேயிலைச் செடிகள்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:45 pm

Syndication

நீலகிரி மாவட்டத்தில்  பனியின் தாக்கத்தின் காரணமாக தேயிலைச் செடிகள் கருகியுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

 நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம்  டிசம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. அதிகாலை நேரத்தில்  பனியின் தாக்கம்  அதிகமாக இருந்து வருகிறது.

குறிப்பாக  குன்னூா், குந்தா, தாய்சோலை, கோரகுந்தா, அப்பா்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில்  பனியின் தாக்கம் தொடா்ந்து  காணப்படுவதால்  இங்கு பயிரிடப்பட்டுள்ள தேயிலைச் செடிகள்  கருகத் தொடங்கியுள்ளன.

மலைச்சரிவுகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் நீா்பனியின் தாக்கம் வரும்  பிப்ரவரி  மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  பனியின் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தேயிலைச் செடிகள் கருகியுள்ளன. இதன் காரணமாக சிறு தேயிலை விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.

Story image