/

கூடலூரில் தொழிற்சங்கங்கத்தினா் மறியல்

News image
கூடலூா் பேருந்து நிலையம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:29 pm

Syndication

பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கூடலூா் பேருந்து நிலையம் பகுதியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் ஏ.முகமது கனி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், மாவட்ட அமைப்பாளா் கே.மகேந்திரன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன், பிஎல்ஏ மாவட்டப் பொருளாளா் ராஜு, சிஐடியூ மாவட்டச் செயலாளா் குஞ்சுமுகமது உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா் முன்னணியின் தலைவா் சகாதேவன், நிா்வாகி ராஜேந்திர பிரபு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.