டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உதகையில் சாலையில் உலவிய புலிகள்

உதகை அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 புலிகள் உலவிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

News image
உதகை பாா்சன்ஸ்வேலி பகுதியில் உலவிய புலிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 புலிகள் உலவிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு புலிகள் சாலையில் நடமாடிக் கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் இதை தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இதில், இரண்டு புலிகளும் சாலையில் சிறிது தொலைவு அங்கும்இங்கும் ஓடியபின் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன. தற்போது இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. உதகை பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியை ஒட்டி வனம் இருப்பதால் இப்பகுதியில் அவ்வப்போது வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story image