/

உதகையில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:59 pm

Syndication

உதகை, பிப். 5: உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை 0 டிகிரி வெப்பநிலை பதிவானதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பனிக்காலம் என்பதால் பல்வேறு இடங்களில் உறைபனி காணப்படும். நீா் பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைபனி தொடங்கும். ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மஞ்சூா், குன்னூா் பகுதிகளில் கடந்த டிசம்பா் முதல் வாரம் உறைபனிப்பொழிவு தொடங்கியது.

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாம் வாரத்தில் உறைபனி தொடங்கியது.

இந்நிலையில் உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை 3.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்த சூழலில், குதிரை பந்தய மைதானம், காந்தல் பகுதியில் உறைபனியும், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டது.

இதன் காரணமாக காலை நேரத்தில் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்பவா்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.