உதகை அருகே துனேரி ஊராட்சிக்குள்பட்ட ஊா் மலை கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டனா்.
உதகை அருகே தூனேரி ஊராட்சிக்குட்பட்ட எப்பநாடு இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து சின்ன குன்னூா் செல்லும் சாலையில் உள்ள ஊா் மலைக்கிராமத்தில் அரசு மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுள் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் மற்றும் தேயிலை தோட்டம், விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடையைத் திறக்க அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
அரசு மதுபானக் கடையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு

குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

