பேருந்தில் இருந்து வனப் பகுதியில் இறக்கிவிடப்படும் மாணவ, மாணவிகள்
குன்னூர் அருகே தூதூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளைப் பேருந்தில் இருந்து வனப் பகுதியில் இறக்கிவிட்டுச் செல்வதால்


குன்னூர் அருகே தூதூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளைப் பேருந்தில் இருந்து வனப் பகுதியில் இறக்கிவிட்டுச் செல்வதால் வன விலங்குகளுக்கு பயந்து தீப்பந்தம் கொளுத்தியவாறு தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரவேண்டிய அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குன்னூர் அருகே, தூதூர்மட்டம், கிரேக்மோர், சட்டன், கொலக்கம்பை, முசாபுரி, டெரேமியா உள்ளிட்ட 10}க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 100}க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுமார் 10 முதல் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆருக்குச்சி, கைகாட்டி, சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இவர்களுக்காக குன்னூர் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் இருந்து காலை, மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் குறித்த நேரத்தில் வராததால் மாணவ, மாணவிகள் தங்களது வகுப்பறைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல் மாலை நேரங்களில் பள்ளியில் சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது தூதூர்மட்டம் கிராமத்துக்கு 7 கி.மீ. முன்பாகவே அறையட்டி கிராமத்தில் மாணவ, மாணவிகளை பேருந்து நடத்துநர், ஓட்டுநர் இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் பெற்றோர்கள், வனப் பகுதி வழியாக தீப்பந்தம் கொளுத்தி தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது:
தூதூர்மட்டம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து குழந்தைகள் ஆருக்குச்சி, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி
களுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்த வழித் தடத்தில் எந்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது கூட தெளிவாகத் தெரிவதில்லை.
இதனால் அறைஹட்டி பகுதியில் இருந்து தூதூர்ட்டத்துக்கு வரும் வழி இருள் சூழ்ந்து, தேயிலைத் தோட்டத்தின் வழியாக வர வேண்டும். அவ்வாறு வரும் வழியில் கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால் போக்குவரத்து அதிகாரிகள் இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...