நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடை சீசனுக்கு குன்னூருக்கு வந்த சிறப்பு விருந்தினர்!

வண்ணத்துப் பூச்சிகள் என அழைக்கப்படும் பட்டாம் பூச்சிகளை எல்லோருமே பார்த்திருக்கலாம். ஆனால், மெகா சைஸ்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:26 am

ஏ. பேட்ரிக்

வண்ணத்துப் பூச்சிகள் என அழைக்கப்படும் பட்டாம் பூச்சிகளை எல்லோருமே பார்த்திருக்கலாம். ஆனால், மெகா சைஸ் பட்டாம்பூச்சியான மாத் என்பதை எவ்வளவு பேர் பார்த்திருப்பர் எனக் கூறமுடியாது. அதனால் இந்த ஆண்டு கோடை சீசனில் நீலகிரிக்கு வந்த சிறப்பு விருந்தினர் என்ற பட்டத்தை தட்டிக்கொண்டு போனது அட்லஸ் மாத் என்ற இந்த மெகா சைஸ் பட்டாம்பூச்சியே ஆகும்.

 குன்னூர், சிம்ஸ் பூங்காவில் சுற்றித்திரிந்த இந்த பட்டாம்பூச்சியை பார்த்தவர்கள் அது என்னவென்றே தெரியாமல் அதைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் அதன் உருவம் வித்தியாசமாக இருந்ததால் பாம்பு என நினைத்தும் பயந்துள்ளனர்.

 அப்போது அங்கிருந்த உதகையை சேர்ந்த தமிழக ஆயுதப்படை பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ், உடனடியாக அதுகுறித்து பூங்காவின் உதவி இயக்குநர் டாக்டர் ராம்சுந்தருக்கு தெரிவித்ததுடன், அதை யாரும் தாக்காமல் பாதுகாத்துள்ளார். டாக்டர் ராம்சுந்தர் விரைந்து வந்து அதற்கு போதிய பாதுகாப்பை ஏற்படுத்தியதுடன், அது சுதந்திரமாக அங்கிருந்து செல்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

 மாத் குறித்து டாக்டர் ராம்சுந்தர் உதகையில் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

 அட்லஸ் மாத் எனப்படும் இந்த உயிரினம் பட்டுப்பூச்சி இனத்தில் மிகப் பெரியதாகும் (சுமார் 10 அங்குலம்). தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மலேயா நாட்டிலும் அபூர்வமாக காணப்படும் இந்த வகை பட்டுப்பூச்சி குன்னூரில் முதல் முறையாகத் தென்பட்டுள்ளது.

 இதன் உருவம், இறக்கையின் இருபுறமும் 2 நாகத்தின் தலை போல இருப்பதால் இதை ஜப்பானில் பாம்புத் தலை மாத் எனவும் அழைப்பர். இந்தியாவில் சில பகுதிகளில் வணிக நோக்கோடும் இது வளர்க்கப்படுகிறது.

 இதன் வாயிலிருந்து வெளிவரும் பசை போன்ற பொருள் பட்டு நூலாகவும் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக பட்டு நூல் தொடர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால், இதிலிருந்து உருவாக்கப்படும் நூல் அடர்த்தியாகவும், உறுதியாகவும் இருக்கும். இது உருவாக்கும் பட்டுக்கூடு தைவான் நாட்டில் பெண்களுக்கு கைப்பை, பர்ஸýகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

 நீலகிரியின் மாறி வரும் தட்பவெப்ப சூழலோ அல்லது வழி தவறியோ குன்னூருக்கு வந்த இந்த அட்லஸ் மாத்,

அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.