மோசடியாக ஓய்வூதியம் பெற்ற பெண்கள் நீலகிரியில் அதிர்ச்சி
நீலகிரியில் மோசடியாக ஒய்வூதியம் பெற்று வந்த பெண்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.


நீலகிரியில் மோசடியாக ஒய்வூதியம் பெற்று வந்த பெண்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
121 பெண்கள் தங்களது கணவர் உயிருடன் இருக்கும்போதே, இறந்து விட்டதாகக் கூறி, போலி சான்றிதழ் பெற்று ஓய்வூதியம் பெற்றுள்ளது நீலகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை சுமார் 27,167 பேர் மாதத்திற்கு ரூ. 1,000 வீதம் ஓ.ஏ.பி. எனப்படும் ஆதரவற்றோர், முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்தனர். இவர்களில் தற்போது 5,600 பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஓய்வூதியம் கிடைக்கப் பெறாதவர்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் திடீரென எவ்வித காரணங்களுமின்றி நிறுத்தப்பட்டுவிட்டதாகப் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வந்த 27,167 பேரில் 5,600 பேரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களில் முகவரிகளில் குடியிருக்காதவர்கள், 60 வயதிற்கும் குறைவானவர்கள், சொத்து வசதி உள்ளவர்கள், குழந்தைகள் அரசுப் பணியில் உள்ளவர்கள் என பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அவர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகள் அரசுப் பணியில் இருக்கும்போதே ஆதரவற்றவர்கள் எனக் கூறி ஓய்வூதியம் பெற்று வந்த 1,415 பேருக்கும், கணவர் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகக் கூறி விதவை என போலி சான்றிதழ் பெற்று ஓய்வூதியம் பெற்று வந்த 121 பேருக்கும், தற்போதைய முகவரியில் வசிக்காததால் இறந்து விட்டதாகக்கூறி ஓய்வூதியம் பெற்று வந்த 149 பேருக்கும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் கூறியதாவது: ஆதரவற்றோர், முதியோருக்கான ஓய்வூதியம் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை எனவும், அவர்கள் மீதான குற்றங்கள் கண்டறியப்பட்ட பின்னரே ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் இது தொடர்பான முழுமையான ஆதாரங்களைத் திரட்ட அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதுமையின் காரணமாக கவனிப்பாரின்றி அவதிப்படுவோருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு, பரிந்துரை செய்த அரசியல்வாதிகள் முதல், அதை ஏற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் வரை அனைத்து நிலையிலும் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...