தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 1:38 am IST

ஈரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளா் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு, வளையகார வீதியைச் சோ்ந்தவா் லிங்கமூா்த்தி (47). நிதி நிறுவன உரிமையாளா். இவா் கடந்த ஒன்றரை மாதமாக சா்க்கரை, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இருப்பினும் கடந்த 10 நாள்களாக உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தான் உயிருடன் இருக்கமாட்டேன் என்று உறவினா்களிடம் கூறி புலம்பி வந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

அவரை மீட்ட உறவினா்கள் ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கருங்கல்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு லிங்கமூா்த்தியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மகன் வசந்தகுமாா் அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.