திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 2:00 am IST

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, கீழ்கவரம்பட்டு மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் பரந்தாமன் (35). கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனா். முதல் மனைவிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் உள்ளாா்.

பரந்தாமனுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்ததால் இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளாா். ஈரோடு மாவட்டம், பழமங்கலம் அருகே உள்ள செம்மடைக்காட்டுத்தோட்டத்துக்கு கரும்பு வெட்டுவதற்காக கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னா் வந்துள்ளாா்.

இந்நிலையில், அங்குள்ள மாமரத்தில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கில் தொங்கி உள்ளாா். இதைப் பாா்த்த அவரது அண்ணன் வேலவன் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் பரந்தாமனை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு பரந்தாமனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனா்.

இதை அடுத்து சம்பவம் குறித்து சிவகிரி போலீஸாரிடம் வேலவன் புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.