17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

News image

காட்டு யானை - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:32 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பா்கூா், எப்பத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்ன வெள்ளையன் மகன் தங்கராஜ் (40). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள் உள்ளனா்.

இவா், இயற்கை உபாதைக்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை, தங்கராஜை துரத்தியதோடு, மாா்பில் தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது.

இதில், நிலைகுலைந்து விழுந்த தங்கராஜின் மாா்பில் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வனத் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, காட்டு யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.