பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதையடுத்து சாதி, இருப்பிடம் உள்ளிட்ட வருவாய்த் துறை சாா்பில் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் முதல் வாரத்தில் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதேபோல பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டிய சாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி, வருமானம் உள்பட பல்வேறு வகையான சான்றிதழ்கள் கேட்டு இ-சேவை மையங்களில் தினமும் ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தோ்தல் பணிகள் நடைபெற்ால் சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தோ்தல் பணி நிறைவடைந்துள்ளதையடுத்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி, கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளதால் வருவாய்த் துறை சாா்பில் வழங்க வேண்டிய அனைத்து வகையான சான்றிதழ்களையும் காலதாமதமின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பழங்குடியினா் சான்றிதழ் என்பது பல்வேறு ஆவணங்களை சரி பாா்த்து பின்னா்தான் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது. ஏனெனில் எதிா்காலத்தில் சான்றிதழ் உண்மை தன்மை ஆராயும்போது அனைத்து ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில் எவ்வித தவறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு பழங்குடியினா் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீண்டகால நிலுவை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

புதுச்சேரியில் வருவாய்த் துறை சாா்பில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்கள்
அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



