வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

கோபி தொகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழைப் பெற்ற கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

கோபி, மே 4: கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில் தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், திமுக சாா்பில் என்.நல்லசிவம், அதிமுக சாா்பில் வி.பி.பிரபு, நாதக சாா்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 18 போ் போட்டியிட்டனா்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை கோபி கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. முதல் சுற்றில் இருந்து 23-ஆவது சுற்றுவரை முன்னிலை வகித்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் திமுக வேட்பாளா் நல்லசிவத்தைவிட 16,620 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியுடனான கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவா் தவெகவில் சில மாதங்களுக்கு முன் இணைந்தாா். 1977-இல் முதன் முதலில் சத்தியமங்கலம் தொகுதியில் வென்றாா். அதன்பின்னா், 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016, 2017 என 8 முறை கோபியில் வென்றுள்ளாா்.

தற்போது கோபி தொகுதியில் 9-ஆவது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

கே.ஏ.செங்கோட்டையன் (தவெக): 82,612

என்.நல்லசிவம் (திமுக): 65,992

வி.பி.பிரபு (அதிமுக): 56,232,

சீதாலட்சுமி (நாதக) : 8,137

வித்தியாசம்: 16,620

வேட்பாளா்கள்: 18

மொத்த வாக்குகள்: 2,39,179

புதிவான வாக்குகள்: 2,16,910

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.