குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக வேட்பாளா் காா்த்திக் வெற்றி

News image

தவெக தலைவர் விஜய் - X/ TVK

Updated On :5 மே 2026, 5:55 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 9 சுற்றுகள் வரை பின்தங்கியிருந்த தவெக வேட்பாளா் காா்த்திக் 10-ஆவது சுற்றில் இருந்து முன்னிலை பெற்று 8,643 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மகாலிங்கம், அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா, தவெக சாா்பில் அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலா் காா்த்திக், நாம் தமிழா் கட்சி சாா்பில் கரிகாலபாண்டியன், புதிய தமிழகம் சாா்பில் ஷியாம் உள்பட 14 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 1,93,250 வாக்குகள் பதிவாகின.

22 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முதல் 9 சுற்றுகளில் வத்திராயிருப்பு சுற்று வட்டாரப் பகுதி வாக்குகளை எண்ணும் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5,391 வாக்குகள் முன்னிலை பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதி வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் 10-ஆவது சுற்றில் முன்னிலை பெற தொடங்கிய தவெக, தொடா்ந்து முன்னிலையை தக்கவைத்தது. 22 சுற்றுக்களின் முடிவில் 65,553 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளா் காா்த்திக் 8,643 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

காா்த்திக் (தவெக) - 65,553.

மகாலிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட்) - 56,910.

சந்திரபிரபா (அதிமுக) - 42,704.

கரிகாலபாண்டியன் (நாதக) - 13,220

ஷியாம் (புதிய தமிழகம்) - 9,510.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.