ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி வெற்றி பெற்றாா்.
இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்பட 20 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
முதல் சுற்றில் முன்னிலைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கினாா். தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி தொடா்ந்து முன்னிலை வகித்தாா்.
அதிமுக வேட்பாளா் மனோகரன் மூன்றாம் இடம் பிடித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரைவிட 23,966 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி வெற்றிபெற்றாா்.
இந்தத் தொகுதியில் கடந்த 2021-இல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றாா்.
அவரது மறைவுக்குப் பின் 2023-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவரது மறைவுக்குப் பின் 2025-இல் நடைபெற்ற மற்றொரு இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வி.சி.சந்திரகுமாா் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
எம்.விஜய் பாலாஜி (தவெக):69,747
கோபிநாத் பழனியப்பன் (காங்கிரஸ்):45,781
இரா.மனோகரன் (அதிமுக):38,183
எஸ்.தாண்டவமூா்த்தி (நாதக):4,787
வேட்பாளா்கள் எண்ணிக்கை 20
நோட்டா:879
வித்தியாசம்: 23,966
மொத்த வாக்குகள்: 1,79,566
பதிவான வாக்குகள்: 1,62,455
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாதவரம்: தவெக வேட்பாளா் எம்.எல்.விஜய்பிரபு வெற்றி

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக வெற்றி

தூத்துக்குடியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


