தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

சிவகிரி வேலாயுதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சிவகிரியில் வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :2 மே 2026, 4:40 am IST

சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சிவகிரியில் வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் இந்த தேரோட்ட நிகழ்ச்சி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகிரியில் நடைபெற்று வருகிறது. சுயம்பு மூா்த்தியாக உள்ள வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டத்தை மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் செந்தில்நாதன், சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத், கோயில் அறங்காவலா் குழுவினா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனற்.

முன்னதாக காலை 6 மணிக்கு வேலாயுதசுவாமி வள்ளி-தெய்வானை திருமணத்தையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்களுக்கு திருமண விருந்து நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மே 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தோ்வடம் பிடித்தல் மற்றும் நிலை சோ்தல், வள்ளிக்கும்மி கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, 4-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனா்.

Story image