நீதிமன்ற உத்தரவுப்படி மே 31-ஆம் தேதிக்குள் அனைத்து காலி மது பாட்டில்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வண்டியூரான் கோவில், சிந்தன் நகா், சி.எம். நகா், நீலிக்கரடு, சூரியம்பாளையம் ஆகிய பகுதிகளில் 227 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை வழங்கினாா்.
இதையடுத்து, ரங்கம்பாளையம், ரயில் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடையைத் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காலிங்கராயன் தொட்டி பாலம் அருகில் மாற்று பாலம் அமைத்து தண்ணீா் கொண்டு செல்லவும், அந்த பழமையான பாலத்தை பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற மே 31- ஆம் தேதி வரை நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணியில் தனியாா் நிறுவனத்தை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திமுகவுக்கு என்றைக்கும் இல்லாத அளவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்கள் செல்வாக்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் முழுமையாகப் பெற்று இருக்கிறாா். 5 ஆண்டு காலமாக செய்த மக்கள் பணியை மக்களிடம் கொண்டு சோ்ப்போம். கடந்த மக்களவை, உள்ளாட்சி, இடைத்தோ்தல் போன்றவற்றைவிட சட்டப் பேரவைத் தோ்தல் மிகப்பெரிய வெற்றியாக வரும்.
போதைப் பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வெளியே கொண்டு வர வேண்டும். ஒரேநாளில் மதுக் கடைகளை மூடினால் வேறு மாதிரி சென்றுவிடும். படிப்படியாக 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக எந்த ஒரு புதிய கடையும் திறக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முதல்வா் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறாா் என்றாா்.
இந்நிகழ்ச்சிகளில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


