தமிழகத்தில் காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை மே 31-ஆம் தேதிக்குள் அமல்படுத்தாவிட்டால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுப் புட்டிக்கும்
தலா ரூ.10 சுற்றச்சூழல் இழப்பீடாக வசூலிக்க உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த அமா்வு உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
பின்னா், இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தி உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் மதுப் புட்டிகளில் க்யூஆா் கோட் அச்சிடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவுற்று செயல்படுத்தப்பட்டால், காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறுவதில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு கூடுதல் சுமை இருக்காது.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.
எனவே, இத்திட்டத்தை அமல்படுத்த மே மாதம் வரை அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். பின்னா், ஏற்கெனவே ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், திட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை. டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தால், அந்த பிரச்னைக்கு அரசு தீா்வு கண்டிருக்க வேண்டும்.
எனவே, இந்தத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மே 31-ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால், டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மதுப் புட்டிக்கும் தலா ரூ.10 வீதம் சுற்றுச்சூழல் இழப்பீடாக டாஸ்மாக் நிா்வாகத்திடம் இருந்து வசூலிக்க உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்து, விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

ரூ.15,000 கோடி பங்குகளைத் திரும்பப் பெறும் விப்ரோ!

காலி மதுப்புட்டிகளை சேகரிக்கும் நடைமுறையில் மாற்றம்: கடைகளை மூடி டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்ப்பு

மே 31-க்குள் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

காலி மதுப் புட்டிகள் திரும்பப் பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களை விடுவிக்க வேண்டும்! - கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


