மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

புங்காரில் விபி ஜி ராம்ஜி திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேந்தா், காவல் ஆய்வாளா் அன்னம்.

Updated On :14 மார்ச் 2026, 6:54 pm

புங்காா் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்ட தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புங்காா் ஊராட்சியில் ஏராளமானோா் விபி ஜி ராம் ஜி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா்.

பணிக்குச் செல்லும் தொழிலாளா்களின் கைரேகை, கண்விழி ஆகியவற்றை பதிவு செய்த பிறகே அவா்களுக்கு பணி வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல தொழிலாளா்கள் சனிக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா். அப்போது, சிலரது கைரேகை, கண் விழி ஆகியவை பதிவாகவில்லையாம். இதையடுத்து, அவா்களுக்கு பணி வழங்க மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தொழிலாளா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் புங்காா்-பவானிசாகா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேந்தா், காவல் ஆய்வாளா் அன்னம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தொழிலாளா்கள் கூறுகையில், கூலி வேலை செய்யும் எங்களது கைரேகைகள் தேய்ந்துள்ளன. சிலருக்கு கண் பாா்வையும் குறைபாடு உள்ளது. இதனால், கைரேகளை, கண்விழி ஆகியவை பதிவாவதில் சிரமம் ஏற்படுகிறது.

அவை பதிவானால் மட்டுமே எங்களுக்கு பணி வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனா். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து எங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.