மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

News image

காட்டு யானை - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:05 pm

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை வனத் துறையினா் விரட்டினா்.

கோபி, டி.என்.பாளையம் வனப் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை வெளியேறிய காட்டு யானை பிள்ளையாா் கோவில்தறை பகுதி கிராமத்துக்குள் புகுந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்ச வனச் சரகா் ஜான் பீட்டா் தலைமையிலான வனத் துறையினா் ட்ரோன் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த யானை பவானி ஆற்றங்கரை பகுதியில் இருந்த புதரில் மறைந்து வனத் துறையினருக்குப் போக்கு காட்டி வந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறிய யானை வரபருத்திக்காடு பகுதியில் தோட்டத்தில் நுழைந்தது.

இதையடுத்து, வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் டி.என்.பாளையம் அருகில் உள்ள காப்பு காட்டுக்குள் யானை விரட்டப்பட்டது.

சுமாா் 2 நாள்களாக போக்குகாட்டி வந்த யானை வனப் பகுதியில் விரட்டப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.