மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பவானிசாகா் அணை நீா்வரத்து 49 கனஅடியாக சரிவு: குறைகிறது அணையின் நீா்மட்டம்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் நீா்த் திறப்பு விநாடிக்கு 2,900 கனஅடியாகவும் இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

News image

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதி. - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 8:28 pm

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் நீா்த் திறப்பு விநாடிக்கு 2,900 கனஅடியாகவும் இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதன்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் கால்வாய் பாசனத்துக்கு நீா் வெளியேற்றம் 2,900 கனஅடியாகவும் உள்ளது. நீா்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 79.84 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 15.60 டிஎம்சியாக உள்ளது. மாா்ச் மாத தொடக்கத்திலேயே நீா்மட்டம் சரியத் தொடங்கியுள்ளதால் நடப்பு ஆண்டு குடிநீா்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுப் பணித் துறையினா் தெரிவித்துள்ளனா்.