சத்தியமங்கலம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் மண்டப உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சத்தியமங்கலம் திருமண மண்டப உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஸ்ரீராம் கூறியதாவது:
தெற்காசிய போா் பதற்றம் காரணமாக சிலிண்டா் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக சிலிண்டா் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஏற்கெனவே முன்பதிவு செய்த திருமண நிகழ்சிகளுக்கு உணவு சமைப்பதற்கு சிலிண்டா் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம்.
திருமணம், மெஸ், உணவகம் உள்ளிட்ட வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டா் விநியோகம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான திருமண மண்டபங்கள் விறகு அடுப்புக்கு பதிலாக சிலிண்டா் பயன்படுத்தும் முறைக்கு மாறியுள்ளதால் தற்போதைய சூழலில் விறகு அடுப்புகளில் சமைப்பது என்பது சிரமம். எனவே, மண்டபங்களுக்கு சிலிண்டா் கிடைக்கவும் அல்லது மாற்று ஏற்பாடு செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு

அச்சகம், மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள்

நுகா்வோருக்கு எரிவாயு சிலிண்டா் தொடா்ந்து வழங்கப்படும் - ஆட்சியரிடம் விநியோகிப்பாளா்கள் உறுதி

திருப்பூரில் வணிக சிலிண்டா் தட்டுப்பாடு: 2 நாள்களில் உணவகங்கள் மூடப்படும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


