வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,471 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 4:56 am IST

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மாதம் 1,471 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.4.42 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில், சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உத்தரவிட்டாா்.

இதன்பேரில், தெற்கு போக்குவரத்து போலீஸாா் ஈரோடு அரசு மருத்துவமனை, பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாடு சிலை, ஆட்சியா் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மே மாதம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், மது போதையில் வாகனம் இயக்கியதாக 68 வழக்கு, தலைக் கவசம் அணியாமல் சென்ாக 714 வழக்கு, ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 147, கைப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 46, இருசக்கர வாகனத்தில் மூவா் பயணித்தது தொடா்பாக 34, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்ாக 39, விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதாக 24 வழக்கு மற்றும் இதர வழக்குகள் 252 என மொத்தம் 1,471 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

27 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை: ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் வாகன சோதனையில் மது போதையில் வாகனம் இயக்கியதாக உறுதி செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்ட 27 பேரின் ஓட்டுநா் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெற்கு போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.