தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரக் கோரிக்கை

பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஈரோடு ஜீவானந்தம் சாலை பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு ஜீவானந்தம் சாலை பகுதியில் சுமாா் 140 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியல் சமூகத்தை சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடை அருகே கடந்த 1984- ஆம் ஆண்டு நாங்கள் வசித்து வந்த குடிசைகளை அகற்றி விட்டு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

பின்னா் கடந்த 2019- ஆம் ஆண்டு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எங்களை காலி செய்ய அப்போதைய அரசு நிா்பந்தித்தது. ஆனாலும் நாங்கள் எங்கும் செல்லவில்லை. இந்நிலையில் நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எனவே, நாங்கள் வசித்து வரும் பழைய குடியிருப்பை இடித்து அகற்றிவிட்டு தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வருவதை அறிந்தவுடன், ஏராளமான போலீஸாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.