தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

பராகம்பா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 5:22 am IST

தில்லியில் உள்ள பராகம்பா சாலையில் உள்ள வணிகக் கட்டடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பராகம்பா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள ஓா் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 9.50 மணியளவில் தகவல் கிடைத்தது. எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டு, உடனடியாக தீயணைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

தீ முதல் மாடியில் உள்ள அலுவலகத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு குளிரூட்டிகள், கணினிகள், அச்சுப்பொறிகள், ஆவணங்கள் மற்றும் தளபாடங்கள் எரிந்து சேதமாகின. காலை 10.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.