17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை(ஜூன் 5)தொடங்குகிறது.

News image

விண்ணப்பம்

Updated On :5 ஜூன் 2026, 12:02 am IST

ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை(ஜூன் 5)தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லுாரி முதல்வா் திருக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கய்ய நாயக்கா் கல்லூரி 2025 ஆம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு தற்போது சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. தற்போது ரூ.13 கோடி செலவில் புதிய ஐஏஎஸ் அகாதெமி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், இளம் அறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 11 இளநிலை பாடங்களுக்கு 2026-2027 கல்வியாண்டிற்கு மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

5 மற்றும் 6 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 8- ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவ, மாணவியா்கள் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.