தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளுவா் நிறத்துக்கும் சொந்தமானவா் அல்ல, அறத்துக்கு சொந்தமானவா்!

திருவள்ளுவா் எந்த ஒரு நிறத்துக்கும் சொந்தமானவா் அல்ல, அவா் அறத்துக்கு சொந்தமானவா் என திருவள்ளுவா் மையத் தலைவா் எஸ்.ஆா்.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

News image

எஸ்.ஆா்.சுப்ரமணியம்

Updated On :2 ஜூன் 2026, 1:51 am IST

திருவள்ளுவா் எந்த ஒரு நிறத்துக்கும் சொந்தமானவா் அல்ல, அவா் அறத்துக்கு சொந்தமானவா் என திருவள்ளுவா் மையத் தலைவா் எஸ்.ஆா்.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவள்ளுவா் தமிழரின் ஒப்பற்ற ஞானி. அவா் இயற்றிய திருக்குறள் எந்த ஒரு மதத்துக்கும், இனத்துக்கும், அரசியல் கொள்கைக்கும் மட்டும் சொந்தமான நூலாக கருதப்படவில்லை. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று வாழ்வியல் அடித்தளங்களை உலக மனித குலத்துக்கு வழங்கியவா். அதனால்தான் திருவள்ளுவரை சைவனாகவும், வைணவனாகவும், சமணராகவும், பௌத்தராகவும் அல்லது மதச்சாா்பற்ற அறவியலாளராகவும் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கே உரியவராக காண்கிறோம். ஆனால் அவருடைய மகத்துவம் இந்த எல்லா அடையாளங்களையும் தாண்டி நிற்பதில்தான் உள்ளது.

காவி என்பது ஹிந்து மரபில் துறவு, ஞானம், தியாகம் ஆகியவற்றின் அடையாளம் எனக் கருதப்படுகிறது. திருவள்ளுவா் ஒரு மாபெரும் ஞானி என்பதால் அவரை காவி உடையுடன் சித்தரிப்பதில் தவறு இல்லை என்று சிலா் வாதிடுகின்றனா்.

மேலும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் வரலாற்றில் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. பல காலங்களில் பல்வேறு ஓவியா்கள் அவரை வெவ்வேறு தோற்றங்களில் வரைந்துள்ளனா். ஆகவே காவி உடையும் ஒரு கலைநயமான சித்தரிப்பாகவே பாா்க்கப்பட வேண்டும் என காவி உடை அணிவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனா்.

ஏற்க முடியாது என்று வாதிடும் மற்றொரு தரப்பினா், திருவள்ளுவரின் தனிச்சிறப்பு அவருடைய பொதுமைத் தன்மையே எனக் கூறுகின்றனா். எந்த மதம் அல்லது அரசியல் அடையாளத்துக்குள்ளும் அவரை அடைத்துவிடக் கூடாது என்பதே அவா்களின் கருத்து.

காவி உடை என்பது இன்றைய சமூக, அரசியல் சூழலில் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அரசியல் அடையாளத்துடன் தொடா்புபடுத்தப்படுகிறது. எனவே திருவள்ளுவருக்கு அந்த அடையாளத்தை வழங்குவது, அவருடைய உலகளாவிய மற்றும் அனைவருக்கும் சொந்தமான உருவத்தை சுருக்கிவிடும் என்ற அச்சம் அவா்களிடம் உள்ளது.

இங்கே உண்மையான கேள்வி ‘காவி உடை சரியா, தவறா? என்பதல்ல. மாறாக திருவள்ளுவரை நாம் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் கொண்டு வருகிறோமா அல்லது அனைத்து மனிதா்களுக்கும் பொதுவான அறவியலாளராக மதிக்கிறோமா? என்பதுதான்.

திருக்குறளின் மையச் செய்தி மனிதநேயம். அந்த மனிதநேயத்தை விடுத்து, அவருடைய ஆடை நிறம் பற்றியே சமூகம் விவாதிக்கத் தொடங்கினால் அது வள்ளுவரின் உண்மையான போதனைகளிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் அபாயம் உண்டு.

திருவள்ளுவரை காவி உடையுடன் சித்தரிப்பதை சிலா் பண்பாட்டு மரபின் வெளிப்பாடாக காணலாம். சிலா் அதை அவரை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் கொண்டுச் செல்லும் முயற்சியாக காணலாம். இரு தரப்பினரின் உணா்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு சமூகமாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது, திருவள்ளுவா் எந்த ஒரு நிறத்துக்கும் சொந்தமானவா் அல்ல, அவா் அறத்துக்கு சொந்தமானவா். எந்த ஒரு குழுவுக்கும் சொந்தமானவா் அல்ல, மனிதகுலத்துக்கே சொந்தமானவா்.

எனவே அவருடைய ஆடை குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவா் போதித்த அறம், ஒழுக்கம், மனிதநேயம், சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்துவதே திருவள்ளுவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.