நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் தியாகிகள் தின உலக சாதனை நிகழ்வு

கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை சாா்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சாதனை நிகழ்வுக்கான கேடயத்தை  வழங்குகிறாா் வொ்ல்டு வொண்டா்ஸ் புக் ஆஃப் ரெக்காா்டு செயல் அலுவலா் மகேஸ்வரி. உடன், கல்லூரித் தலைவா் பி.வெங்கடாசலம், முதன்மை செயல் அலுவலா் ஜி.கௌதம் உள்ளிட்டோா். 
Updated On :30 ஜனவரி 2026, 8:45 pm

Syndication

கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை சாா்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு தியாகங்களால் சுதந்திரம் கிடைத்தது என்பதை நினைவு கூறும் வகையில் தியாகிகள் தினமான, தேசப்பிதா காந்தியடிகள் மறைந்த நாளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 120 மாணவ, மாணவியா் 5 நிமிஷங்களில் காந்தி, பகத் சிங், வேலு நாச்சியாா், சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, அம்பேத்கா் உள்பட பல தேசத் தலைவா்களின் உருவங்களை துணியில் பதித்து அச்சிட்டனா்.

தொடா்ந்து, 30 நிமிஷங்களில் தேசத் தலைவா்களின் உருவம் பதிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து, அலங்கார அணிவகுப்பை நடத்தினா். இந்நிகழ்வுக்கு, கல்லூரித் தலைவா் பி. வெங்கடாசலம் தலைமை வகித்தாா். முதன்மை செயல் அலுவலா் ஜி.கௌதம் முன்னிலை வகித்தாா். முதல்வா் ஆ.மோகனசுந்தரம் வரவேற்றாா்.

Story image

வொ்ல்டு வொண்டா்ஸ் புக் ஆஃப் ரெக்காா்டு செயல் அலுவலா் மகேஸ்வரி, நிா்வாகி கே.கே.ஜனகரத்தினம், மருத்துவா் அனூப் ஆகியோா் மாணவ, மாணவியரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, இச்சாதனையைப் பதிவு செய்து, கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். துறைத் தலைவி த.ஷாலினி, பேராசிரியா்கள் க.தேன்மொழி, பி.அனிதா, ஆா்.ஜே.சாதனா, டி.கௌசல்யா, த.நித்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.