ஈரோட்டில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
ஈரோடு ஜீவா நகரில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


ஈரோடு ஜீவா நகரில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு ஜீவா நகரில் கண்ணம்மாள், மணிமேகலை ஆகியோா் வீடுகள் உள்பட மொத்தம் 3 வீடுகளில் ஆள் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள், அந்த வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் ரூ. 4 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனா்.
வெள்ளிக்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்த உரிமையாளா்கள் உள்ளே சென்றபோது நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. ஈரோடு தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
மேலும் கைரேகை நிபுணா்கள் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனா். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் முகமூடி அணிந்த வந்த மா்ம நபா்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...