8 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு!
தேனி மாவட்டம், போடி அருகே வட மாநில தொழிலாளா்கள் வசிக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


தேனி மாவட்டம், போடி அருகே வட மாநில தொழிலாளா்கள் வசிக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போடிமெட்டு மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமராஜ் (57). இவருக்கு சொந்தமான ஏலத் தோட்டம் மணப்பட்டி மலைக் கிராமத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் தொழிலாளா்களுக்கு தனியாக குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு வீடுகளில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 13 தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை தொழிலாளா்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனா். அப்போது, 8 வீடுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னா், தொழிலாளா்கள் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ஜெகதீஷ் வீட்டில் ரூ.20 ஆயிரம், மஞ்சு வீட்டில் ரூ.50 ஆயிரம், ரமேஷ் வீட்டில் ரூ.11 ஆயிரம், ரஜினி வீட்டில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசு, முருகன் வீட்டில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்கத் தோடு, மோதிரம், ரூ.20 ஆயிரம் என மொத்தம் 8 வீடுகளில் பணம், நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...