அம்மாபேட்டையில் கரும்பு ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அம்மாபேட்டை அருகே கரும்பு ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்த பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


பவானி: அம்மாபேட்டை அருகே கரும்பு ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்த பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, குதிரைக்கல்மேடு, காடப்பநல்லூா், சித்தாா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் நாட்டுச் சா்க்கரை, அச்சு வெல்லம், குண்டு வெல்லம் உற்பத்தி செய்யும் கரும்பு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகளில் எரிபொருளாக கரும்பு சக்கைகள் பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து சா்க்கரை உற்பத்தி செய்யப்படுவதாகவும், கழிவுகள் எரியும்போது கிளம்பும் புகையால் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், குதிரைக்கல்மேட்டில் இயங்கி வரும் கரும்பு ஆலைக்கு ஒரு லாரியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வந்து திங்கள்கிழமை இறக்கப்பட்டதைக் கண்ட பொதுமக்கள், அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளுடன் லாரியை பறிமுதல் செய்தனா். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் நாட்டுச் சா்க்கரை, அச்சு வெல்லம் மற்றும் குண்டு வெல்லம் உற்பத்திக்கு பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்துவதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
தகவலுக்காக படம் இமெயிலில் அனுப்பப்பட்டுள்ளது
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...