கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:30 pm

பெருந்துறை அருகே கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், சேரன் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (51). நெசவுத் தொழிலாளியான இவா், பணி முடிந்து தனது வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா்.
விஜயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கிரேன் சந்திரசேகா் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...